கொரோனாவிலிருந்து மீண்ட விஷால்

உலகளாவிய ரீதியில் ஆயிரக் கணக்கான உயிர்களை காவு கொண்டுள்ளது கொரோனா வைரஸ்.

அதுமட்டுமன்றி அதன் தாக்கம் தொடர்ந்தும் மிரட்டி வருகின்றது.

இந்தநிலையில், கொரோனாவின் பிடியிலிருந்து தானும் தனது தந்தையும் மீண்டு வந்துள்ளதாக நடிகர் விஷால் உறுதி செய்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தனது தந்தைக்கு அருகே இருந்து உதவிகள் செய்தமையால் தனக்கும் தொற்று ஏற்பட்டதாகவும் பின்னர் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் மீண்டு வந்துள்ளதாகவும் கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!