கொலை மிரட்டல்… நான் பயப்பட மாட்டேன்… பவன் கல்யாண் பேச்சு

ஐதராபாத்:
கொலை மிரட்டல்… தனக்கு கொலை மிரட்டல் என்று அரசியலில் குதித்துள்ள நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர். பவர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் பவன் கல்யாண், பன்முகத் திறமை கொண்டவர்.

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த அஞ்ஞானவாசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் ஜன சேனா என்ற அரசியல் கட்சியை 2014ம் ஆண்டு தொடங்கினார் பவன் கல்யாண். இருப்பினும் இப்போது தான் இவர் முழு நேர அரசியலில் குதித்துள்ளார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் தன் கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

சில மர்ம நபர்கள், காரில் விபத்தை ஏற்படுத்தி அல்லது குண்டு வைத்து கொலை செய்துவிடுவோம் என செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!