கோடை விடுமுறையில் திரைக்கு வரும் சிந்துபாத்

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள சிந்துபாத் திரைப்படம், வருகிற மே 16ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக விஜய் சேதுபதி, புத்தாண்டு வாழ்த்துக்களுடன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார்.  இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து சிந்துபாத் திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். மேலும் இதில், அஞ்சலி நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இவர்களுடன், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும், டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்ற நிலையில், சிந்துபாத் திரைப்படம், வரும் மே 16ல் திரையிடப்படும் என விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!