கோயில், கோயிலாக சென்று தரிசனம் செய்யும் சௌந்தர்யா ரஜினி

சென்னை:
2வது திருமணம் செய்து கொள்ள உள்ள ரஜினியின் மகள் சௌந்தர்யா திருப்பதிக்கு பின்னர் சுசீந்திரம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா சினிமாவில் கிராபிக் டிசைனராக அறிமுகமாகினார்.

பின் படங்கள் இயக்குவது, தயாரிப்பது என சில வேலைகள் செய்தார். அதேசமயம் அஸ்வின் என்பவரை திருமணம் செய்த அவர் சில பிரச்னைகளால் விவாகரத்து பெற்றார், அவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார்.

இப்போது சௌந்தர்யா, நடிகர் விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். வரும் பிப்ரவரி 11ம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்காக திருப்பதி கோவில் சென்று தரிசனம் செய்த சௌந்தர்யா இப்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!