கோலமாவு கோகிலா….பிரமாதம்…பாராட்டிய ரஜினி

சமீபத்தில் நயன்தாரா  நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன கோலமாவு கோகிலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைக்கா புரடொக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா – யோகி பாபு கூட்டணியில் படம் முழுக்க நகைச்சுவை வெள்ளத்தில் மிதப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் மிகச்சிறப்பாக இருப்பதாக  இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு போன் செய்து கூறியுள்ளார். படம் எனக்கு மிகவும் பிடித்தது.

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது என இயக்குனர் நெல்சனை  பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார். ரஜினியின் இந்த தொலைபேசி அழைப்பையும், பாராட்டையும் கொஞ்சமும் எதிர்பார்க்காத நெல்சன் ஒரு கணம் திகைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்த நெல்சன் தன் வாழ்க்கையில் இது தான் மிகச்சிறந்த தருணம் என்று  பெருமிதம் கொள்கிறார்.

Sharing is caring!