கோலமாவு கோகிலா….விக்னேஸ் சிவன் இயக்கிய பிரமோசனல்

‘ நானும் ரௌடி தான் ‘  திரைபடத்திற்கு பிறகு மூன்று வருடம் களித்து நயன்தாராவுடன் இணைந்து வேலை செய்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா திரைப்படத்துக்கு பிரோமோஷனல் வீடியோவை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கோலமாவு கோகிலா. இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் அனிருத்.

இந்த படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. “மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த அழகியுடன் சேர்ந்து வேலை செய்ய வாய்ப்பு கிடைதுள்ளது. கோலமாவு கோகிலா படத்தின் கனின் காதல் பாட்டின் பிரமோஷனல் வீடியோவை இயக்கியுள்ளேன்” என்று தன்  இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் இவரும் நயன்தாராவும் எடுத்துக்கொண்ட போட்டோவையும் பதிவிட்டுள்ளார். தற்போது சமுக வலைதளங்களில் இவர்கள் போட்டோ ட்ரண்ட் ஆகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sharing is caring!