கோலிவுட்டிலும் படம் தயாரிக்க முகேஷ் அம்பானி முடிவு?

சென்னை:
கோலிவுட்டிலும் தடம் பதிக்கிறது ஜியோ ஸ்டுடியோ. முகேஷ் அம்பானி நிறுவனம்தாங்க.

அம்பானி குடும்பம் இந்தியாவில் கால் பதிக்காத இடமே இல்லை போல. தற்போது சினிமாவிலும் கால் பதிக்க ரெடியாகி வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு சில பாலிவுட் படங்களை தயாரித்த இவர்கள் தற்போது கோலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளனர்.

முகேஷ் அம்பானி ஜியோ ஸ்டுடியோ என்பதை கோலிவுட்டிற்கு கொண்டு வரப்போகிறாராம். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் படத்தை சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கவுள்ளாராம்.

சிவகார்த்திகேயன் மட்டுமின்றி விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!