கோலிவுட்டே கதியென்று இருக்கும் நடிகை

நடிகை பாவனா, பிரச்னையில் கைது செய்யப்பட்டதை, அடுத்து, மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார் நடிகர் திலீப். நடிகர் மோகன்லால், மலையாள நடிகர் சங்க தலைவரானதும், திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடி பிடித்த நடிகைகளில் ரம்யா நம்பீசனும் ஒருவர்.

அதனால், அவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், கோலிவுட்டே கதியென்று கிடக்கிறார். அவரை, அக்னிதேவ் என்ற படம் மூலம் ஆதரித்துள்ளார், பாபி சிம்ஹா. கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!

Sharing is caring!