க்ரைம் திரில்லர் கதையை படமாக்க கூடாது… மிஷ்கினுக்கு கோர்ட் உத்தரவு

சென்னை:
க்ரைம் திரில்லர் கதையை படமாக எடுக்க கூடாது என்று இயக்குனர் மிஷ்கினுக்கு கோர்ட் தடை போட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தயாரிப்பாளர் ரகுநந்தன் தன் மகன் மைத்ரேயனை வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க மிஷ்கினை அணுகினாராம். அப்போது மிஷ்கின் ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லி முன் பணமாக
ரூ.1 கோடிக்கான 2 காசோலையை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் படம் எடுக்க முன்வராததால் ரகுநந்தன் தன் மகனை தவிர வேறு யாரையும் வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்கக்கூடாது என மிஷ்கின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ரகுநந்தன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாருக்கு பதிலளிக்க அவருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!