சங்கத்தை எதிர்த்து பேசியதாலேயே சின்மயி நீக்கம்?

சென்னை:
சங்கத்திற்கு எதிராக பேட்டி கொடுத்ததால்தான் சின்மயி நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீ டூ பிரச்னை சின்மயியால் தான் தலை தூக்கியது. பலரும் அவருக்கு ஆதரவாக இருக்க, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று அவருக்கு வந்துள்ளது.

ஆம் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது எதற்கு என்று கேட்க, சந்தா கட்டவில்லை என்று சின்மயியே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆனால், அது மட்டும் காரணமில்லையாம், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் “தமிழ் நாடு டப்பிங் யூனியனில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது என்று சங்கத்தை எதிர்த்து பேசியுள்ளாராம்.

இதற்கு விளக்கம் கேட்ட யூனியனுக்கு பதில் அளிக்காத காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!