சசிகுமாரின் ஜோடி மாறியது ஏன்?

2012-ம் ஆண்டு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘சுந்தர பாண்டியன்’. இந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்த ‘சத்ரியன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தில் இணைகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். சூரி, யோகி பாபு காமெடியன்களாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிக்கி கல்ராணியை அணுகினார்கள். அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தநிலையில் கடைசிநேரத்தில் திடீரென மடோனா செபாஸ்டியனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் நாயகனான சசிகுமார், மடோனாவை ஒப்பந்தம் செய்ய சொன்னாராம். அதனாலேயே மடோனாவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

Sharing is caring!