சட்டப்படி நடவடிக்கை… நடிகை கஸ்தூரி எச்சரிக்கை

சென்னை:
தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசாக அளித்திருந்தார். அதை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தான் விஜய்யை விமர்சித்துவிட்டதாக மீடியாவில் தன்னை பற்றி சித்தரிப்பு ஏற்படுத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அப்படி செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!