சண்டக்கோழி படம் வருகிற 17ந் தேதி ரிலீஸ்

வரலட்சுமி நடித்துள்ள சண்டக்கோழி படம் வருகிற 17ந் தேதி வருகிறது. இதுகுறித்து பேட்டியளித்த வரலட்சுமி, முதன் முறையாக தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எல்லோருமே “எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்” என்று கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் இலக்கு இல்லை. அதையும் தாண்டி அவள் சாதிக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும் நிறைய இருக்கிறது. அதற்காக திருமணத்தை சாதாரணமாக குறிப்பிடவில்லை.

திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண்மகனை சந்திக்க வேண்டும், சில காலம் அவரை காதலிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகே திருமணம். அப்படியான ஒரு சூழல் வரும்போது கண்டிப்பாக எனது திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவிப்பேன்.

இப்போது கை நிறைய படங்கள் இருக்கிறது. மன நிறைவோடு நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒருபுறம் நடிப்பு, இன்னொருபுறம் பெண்களுக்கான பணி என எனது பாதையை தெளிவாக வகுத்துக் கொண்டிருக்கிறேன். சேவ் சக்தி அமைப்பின் மூலம் பெண்களுக்கான பல திட்டங்கள் வைத்திருக்கிறேன். பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வேண்டுமானலும் செய்வேன். அரசியலில் சேர்ந்தால் அதை செய்ய முடியும் என்றால் அரசியலிலும் குதிப்பேன் என்றார்.

Sharing is caring!