‘சண்டக்கோழி 2’ விமர்சன ரீதியாகவும்இ வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

லிங்குசாமி இயக்கத்தில் விஷால்இ கீர்த்தி சுரேஷ்இ வரலட்சுமிஇ ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும்இ வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழை விட தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வெற்றி சந்திப்பு ஆந்திராவில் நடைபெற்றது. இதில் விஷால் கலந்து கொண்டார். அப்போது ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கான ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார் விஷால்.
‘வரலட்சுமியுடன் தான் திருமணமா? எப்போது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குஇ “வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர் சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும்இ யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன்” என்று விஷால் பதிலளித்தார்.

Sharing is caring!