சண்டைக்காட்சிகள் எடுக்கிறாங்க… விஜய் படத்தின் படப்பிடிப்பு!

சென்னை:
விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் தற்போது சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

தெறி, மெர்சலை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ-விஜய் கூட்டணியில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு இடத்தில் சூழ்ந்துள்ளனர். அவர்களையும் விஜய் சந்திக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 2, 3 நாட்களாக வெளியாகி இருந்தது.

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த படப்பிடிப்பில் தற்போது சண்டை காட்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் விஜய்-நயன்தாரா இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!