சந்தனுவை மெர்சலாக்கிய விஜய்

கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கும் புதிய படம், “ராவண கோட்டம்”. கதிர் நடித்த மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கும் இந்த படம் பூஜையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. கண்ணன் ரவி தயாரிக்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை போட்டோக்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாந்தனு. அதையடுத்து அவரது திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் விஜய்யும் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள சாந்தனு : டைட்டீல் செம, வாழ்த்துக்கள் நண்பா என்று விஜய்யிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. காலையில் எழுந்து இதை பார்த்ததும் தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரித்து விட்டது. மெர்சலாகி விட்டேன். நன்றி விஜய் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!