சந்திரன், தற்போது தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்

கயல் படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்திரன், தற்போது தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவே, கயல் சந்திரன் என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார். தற்போது தன்னுடைய உண்மைப் பெயரான சந்திரமௌலி என்று அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில்,

எனது அறிமுகப் படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது. இதுநாள் வரை சந்திரன் என புனைப்பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!