சந்தீப் ரெட்டி வங்கா, ஹிந்தியிலும் கதாநாயகி கியாரா அத்வானி

தெலுங்கில் விஜய்தேவர கொண்டா நடித்து ஹிட்டடித்த படம் அர்ஜூன் ரெட்டி. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அர்ஜூன்ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார். ஷாகித் கபூர் நாயகனாக நடிக்கும் நிலையில், கதாநாயகியாக கியாரா அத்வானி நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷி வேடத்தில் நடித்து பிரபலமானவர். லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர்.

Sharing is caring!