சந்தோஷம் பணத்தில் இல்லை…மனதில் உள்ளது… இளையராஜா பேச்சு

சென்னை:
சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை, அவரவரின் மனதில் தான் உள்ளது என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசை என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் இளையராஜா தான். அந்த அளவுக்கு பல மயக்கும் பாடல்களை கொடுத்துள்ளார் அவர். இதுவரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய இளையராஜா தான் சிறு வயதில் 8 வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் வேலைக்கு சென்றது பற்றி பேசியுள்ளார். வைகை அணை கட்டிட வேலைக்கு தான் முதலில் சென்றாராம் அவர்.

அதன்பின் கட்டுமான பொறியாளர் அவரின் சிப்பாந்தியாக இளையராஜாவாக சேர்த்துக்கொண்டாராம். “வேலைக்கு சேர்ந்து நான் சம்பாதித்த முதல் மாத சம்பளம் ஏழு ரூபாய் புத்தம் புதிய நோட்டை கையில் வாங்கியதும் ஏற்பட்ட மகிழ்ச்சி, ஏழு கோடி ரூபாய் சம்பாதித்தபோது கிடைக்கவில்லை. சந்தோஷம் என்பது பணத்தில் இல்லை, அவரவரின் மனதில் தான் உள்ளது” என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!