மணிரத்னம் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் சந்தோஷ் சிவன்

மணிரத்னம் இயக்கிய இருவர், தளபதி, ரோஜா, உயிரே, ராவணன், செக்கச்சிவந்த வானம் என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் மணிரத்னம் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், மணிரத்னம் 35 ஆண்டுகளாக படம் இயக்கி வருகிறார். ஆனால் இன்று வரை தனது ஒவ்வொரு படத்தையும் முதல்பட இயக்குனர் போலவே இயக்கிக்கொண்டிருக்கிறார். அவரது வேகமும், எனர்ஜியும் அப்படியே உள்ளது. அவருடன் பணியாற்றும் ஒவ்வொரு படங்களிலுமே அவரது அதே எனர்ஜி என்னை ஆச்சர்யப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!