சமந்தாவின் யூ-டர்ன் டிரைலர் வெளியானது

கன்னடத்தில் 2016-ம் ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘யூ டர்ன்’. ஹாரர்-த்ரில்லர் ஜானர் படம் இது . இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை பவண்குமார் இயக்கியுள்ளார். சமந்தா, ஆதி, பூமிகா, நரேன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்ற நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் யூ-டர்ன் படம் செப்டம்பர் 13 வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்க பட்டிருந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்படும் என சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டது. ஆதி போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பது இந்த டிரைலர் மூலம் தெரிகிறது.

Sharing is caring!