சமந்தா கார் டிரைவர்

திருமணத்திற்குப் பின்னும் தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்தவர் சமந்தா. திருமணம் ஆனவுடன் நடிகைகளுக்கு வரவேற்பு குறைந்துவிடும் என்ற வாசகத்தைப் பொய்யாக்கியவர் சமந்தா. அவர் நடித்து விரைவில், ‘சீமராஜா, சூப்பர் டீலக்ஸ்’ படங்கள் வெளிவர உள்ளன. அடுத்து கன்னட ‘யு டர்ன்’ ரீ-மேக்கை தமிழ், தெலுங்கில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, சமந்தா ஒரு புதிய படம் ஒன்றில் கார் டிரைவராக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிசய்யா அந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் சமந்தா நடிக்க உள்ள கதாபாத்திரம் டாம் க்ரூஸ் நடித்து வெளிவந்த ‘கொலெட்ரல்’ படத்தில் உள்ள டிரைவர் மேக்ஸ் கதாபாத்திரம் போன்று இருக்குமாம்.

Sharing is caring!