சமந்தா சிலம்பம் சுற்றிய அழகு

பெரும்பாலும் ரொமான்டிக் நாயகியாகவே நடித்துள்ள சமந்தா, சமீபகாலமாக சற்று அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா படத்தில் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் டீச்சராக நடித்துள்ளார்.

இதுபற்றி சமந்தா கூறுகையில், இந்த வேடத்தில் நடிப்பதற்கு முன்பு சிலம்பம் பற்றிய அனுபவமே இல்லாமல் இருந்த நான் அதற்காக 3 மாதங்களாக ஒரு சிலம்ப மாஸ்டரிடம் பயிற்சி எடுத்தேன். நிறைய கஷ்டப்பட்டேன்.

ஸ்பாட்டிற்கு வந்த பிறகும் மாஸ்டர் ஒவ்வொரு சிலம்ப காட்சியிலும் பயிற்சி கொடுத்தார். அப்படித்தான் சீமராஜாவில் நடித்தேன். பின்னர் நடித்த காட்சிகளை மானிட்டரில் பார்த்தபோது ஆச்சர்யப்பட்டேன். கத்துக்குட்டி போன்று இல்லாமல் ஒரு கைதேர்ந்த சிலம்பாட்ட மாஸ்டர் போலவே நான் சிலம்பம் சுத்திய காட்சிகள் சிறப்பாக வந்திருந்தது. நான் ரசித்தது போலவே, ரசிகர்களும் ரசிப்பார்கள் என்று கருதுகிறேன் என்கிறார் சமந்தா.

Sharing is caring!