சமயம் வரும் போது சொல்லுவேன்… நடிகர் விஷால் சொல்றார்

சென்னை:
சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்து தெளிவுப்படுத்துவேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் இதுபற்றி இதுவரை வெளிப்படையாக பேசியதே இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் சண்டக்கோழி 2 படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷாலிடம் நிருபர்கள் அவரது திருமணம் பற்றி கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அவர் “வரலட்சுமி எனது நண்பர். மனதுக்கு நெருக்கமானவர். சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்து தெளிவுப்படுத்துவேன்” என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!