சமுத்திரகனியுடன் வட சென்னை தனுசின் கனவுப் படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இந்த படம் வ ட சென்னை தாதாயிஸத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. கேரம்போர்டு விளை யாட்டு, தாதாயிஸம் என செல்லும் இந்த கதையில் சமுத்திரகனி, கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்துள்ளனர்.

தனுஷின், பிறந்த நாளான நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பெரிய அளவிலான வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், வட சென்னை எனது கனவு படம் . என்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள தனுஷ், வடசென்னை டீசரை வரவேற்று படம் வெற்றி பெற வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!