“சமூக வலைதளங்களுக்கு தடை… நாக சைதன்யா அருகில் இருந்தால்”

ஐதராபாத்:
நாக சைதன்யா என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார் சமந்தா.

நட்சத்திர காதல் தம்பதிகள் சமந்தா, நாக சைதன்யா. இருவருக்கும் இடையே ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர் சமந்தா.

நாக சைதன்யா அப்படி இல்லை. முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கிறார். சமந்தாவின் சமூக வலைதள ஆர்வத்தை கண்டு சில சமயம் நாகசைதன்யா கோபப்படுகிறாராம்.

இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று நாக சைதன்யா கேட்கிறார். அதனால் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!