சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது

ஏ.எம்.ரெட் கார்பெட் பிலிம்ஸ், எஸ்.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அனுமணி, சால திம்ம ரெட்டி இணைந்து தயாரிக்கும் படம் வேறென்ன வேண்டும். நரேன்ராம் தேஜ், பெரான கண்ணா, தர்ஷன், அனுபமா, சுப்பிரணி, ஆதித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரேம்குமர் சிவபெருமான் ஒளிப்பதிவு செய்கிறார். சிவபார்வதி குமாரன் இயக்குகிறார் படம் பற்றி அவர் கூறியதாவது:

இன்றைக்கு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. சமீபத்தில் ஒரு மருத்துவ மாணவியை பேஸ்புக்கில் காதலித்த ஒரு பாதுகாவல் அதிகாரி சுட்டுக் கொன்றிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களை இணைத்தே இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சமூகவலைத்தளங்களின் பின்னணியில் இன்றைய இளைய சமுதாயம் என்ன பலன் அடைந்திருக்கிறது. என்ன தீமை அடைந்திருக்கிறது என்பதை சொல்லுகிற படம். என்றார்.

Sharing is caring!