சம்பளத்தை குறைத்துக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி?

சென்னை:
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ள ரஜினிகாந்த் அதில் தன் சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த பேட்ட படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மார்ச் மாதம் ஷூட்டிங் துவங்கவுள்ள நிலையில் ரஜினி 90 நாள் கால்ஷீட் இந்த படத்திற்காக ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்திற்கான தனது சம்பளத்தை குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் ரஜினியை வைத்து இதற்குமுன் தயாரித்த 2.0 படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் தமிழ்நாட்டில் ஈட்டவில்லை.

வெளிநாடுகளில் நல்ல வசூல் வந்தாலும் தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அடுத்த படத்தில் ரஜினி தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!