சம்பளம் வாங்காமல் நடித்த நடிகன்

பாலா இயக்கிய தாரைத்தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். தொடர்ந்து வில்லனாக நடித்த அவர், தற்போது பில்லா பாண்டி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ராஜ்சேதுபதி இயக்கியிருக்கிறார்.

அஜித்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா, சாந்தினி மற்றும் தம்பிராமைய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சூரியும் ஒரு ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் வாங்கவில்லையாம்.

பில்லா பாண்டி படப்பிடிப்பு தளத்திற்கு ஆர்.கே.சுரேஷை பார்க்க சென்றிருக்கிறார் சூரி. அப்போது அவரை நடிக்குமாறு கூற உடனே நடித்துக் கொடுத்துள்ளார். ஒரு கிராமிய பாடலில் அவருடன் இணைந்து சூரி சிறிது நேரம் நடனமாடியிருக்கிறார். ஒரேயொரு நாள் மட்டுமே நடித்த சூரி, அதற்காக சம்பளமே வாங்கவில்லையாம். நட்புக்காக நடித்துக் கொடுத்துள்ளாராம்.

Sharing is caring!