சயின்ஸ் பிக்சன் படத்தில் ராஜ்கிரண்

அட்டகத்தி தினேஷ், நகுல் நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா. அப்படத்தின் கவனத்தை ஈர்த்தவர், அடுத்து சிபிராஜ், ஜீவாவை வைத்து ‘போக்கிரி ராஜா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப்படம் படு தோல்வியடைந்தது.

இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம்பிரகாஷ் ராயப்பா. இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்து சயின்ஸ் பிக்ஷன் கதை ஒன்றை இயக்க இருக்கிறார்.

இதில், ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். சின்னத்திரை நடிகரான ரக்ஷனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தனுஷின் ‘பவர்பாண்டி’ படத்தில் பவர்புல்லான கேரக்டரில் நடித்த ராஜ்கிரண், தற்போது சண்டக்கோழி-2 படத்தில் நடித்து வருகிறார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் சயின்ஸ்பிக்ஷன் படத்திலும் ராஜ் கிரணுக்கு மிரட்டலான கேரக்டராம். சுட்டுப்பிடிக்க உத்தரவு ரிலீஸ் அன்று இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

Sharing is caring!