“சயீரா நரசிம்ம ரெட்டி“ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து…!

விஜய் சேதுபதி,  சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 ராம் சரண் தயாரிப்பில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் இணைந்து தயாராகும்  படம் சயீரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்திற்கான பிரமாண்ட செட், ஆந்திர மாநிலம், கோக்காபேட்டையில் உள்ள சிரஞ்சீவிக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை  இந்த பிரமாண்ட செட்டில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!