சரித்திரக் கதையில் சூர்யாவை இயக்குகிறார் சசிகுமார்

சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கி, நடித்த சசிக்குமார், தொடர்ந்து சில படங்களை நடித்து, இயக்கி இருக்கிறார். தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ரஜினியின் பேட்ட திரைப்படத்திலும், ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிலேயே அதிக ஆர்வம் காட்டும் சசிகுமார், படம் இயக்குவதைத் தவிர்த்தார். இந்நிலையில், அவர் சரித்திரக் கதை ஒன்றை இயக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்காக, சரித்திர கதை ஒன்றோடு, நடிகர் விஜய்யை அணுகி, அவரை நடிக்கக் கேட்டுள்ளார். ஆனால், விஜய் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே சரித்திரக் கதையோடு, நடிகர் சூர்யாவை அணுகி இருக்கிறார் சசிக்குமார். சூர்யாவுக்கு கதை பிடித்துவிட்டதாகவும், நடிக்க ஆர்வம் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில், சசிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க, சரித்திரக் கதை படமாக்கப்படும் எனவும், சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Sharing is caring!