“சரியான நபரா… அப்போ நாளையே திருமணத்திற்கு தயார்”

சென்னை:
சரியான ஒருவரை சந்தித்தால் நாளையே திருமணம் செய்ய தயார் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா பலவருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிகர் ராணாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் அவர் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் திருமணம் நின்றுவிட்டது. இந்நிலையில் தற்போது திருமணம் பற்றி ஒரு பேட்டியில் த்ரிஷா பேசியுள்ளார்.

“இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை. சரியான ஒருவரை சந்தித்தால் நாளையே திருமணம் செய்ய தயார்” என கூறியுள்ள த்ரிஷா.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!