சர்காருக்கு புது விதமான சர்ச்சை கிளப்பும் கோமளவள்ளி

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு அரசியல் நிகழ்வுகளை தோலுரித்து காட்டும் விதத்தில் இந்தப்படம் அமைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் வரலட்சுமி, அரசியல்வாதியின் மகளாக, வில்லி கதாபாத்திரத்தில் கோமலவள்ளி என்ற பெயரில் நடித்திருக்கிறார். பெற்ற தந்தைக்கே விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு வரலட்சுமியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

கோமலவள்ளி பெயர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற் பெயராகும். இதனால் சர்காருக்கு புது விதமான சர்ச்சை கிளம்பி உள்ளது.

Sharing is caring!