சர்கார் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது – எச்சரிக்கை

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்துள்ள சர்கார் படம். முழுக்க முழுக்க அரசியல் பேசுகிறது. குறிப்பாக இன்றைய அரசியல் நிலவரத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், மற்றொருபுறம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

இந்நிலையில் சர்கார் படம் தொடர்பாக விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : சர்கார் படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்து வரும் நடிகரான விஜய், இதுபோன்று நடித்திருப்பது நல்லதல்ல என கூறியுள்ளார்.

Sharing is caring!