சர்கார் எதிர்ப்புகளுக்கு நடுவே வசூல் ரீதியாக சாதனைகள்

தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள விஜய்யின் சர்கார் எதிர்ப்புகளுக்கு நடுவே வசூல் ரீதியாக சாதனைகள் செய்து கொண்டு வருகிறது. மேலும், இந்த படம் மூலம் இதுவரை மக்களுக்கு தெரியாமல் இருந்து வந்த 49 பி என்ற தேர்தல் விதிமுறை தெரிய வந்திருக்கிறது.

இதுவரை 49 ஓ என்கிற நோட்டாவைப் பற்றித் தான் மக்கள் தெரிந்திருந்தனர். ஆனால் இந்த சர்கார் படத்தில் விஜய்யின் ஓட்டை கள்ள ஓட்டுப்போட்டு விட்டதை அடுத்து, அவர் 49 பி என்ற தேர்தல் விதிமுறையை பயன்படுத்தி சட்டரீதியான முயற்சியில் இறங்குகிறார்

அதையடுத்து அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்த நீதிபதி உத்தரவு போடுகிறார். இப்படியொரு சட்டம் இருக்கிற விசயமே அநேக மக்களுக்கு தெரியாமல் தான் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் தங்களது ஓட்டை யாராவது கள்ள ஓட்டுப்போட்டு விட்டால், 49 பி மூலம் சட்டரீதியான நட வடிக்கை எடுத்து மீண்டும் ஓட்டுப்போடலாம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த 49 பி என்கிற தேர்தல் விதிமுறை பற்றிய தகவல்களை அறிய, கூகுளில் அதிகப்படியாக தேடப்பட்டு வருகிறது.

Sharing is caring!