சர்கார் தெலுங்கிலும் வருகிறது

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

அக்.,02 ம் தேதி காந்திய ஜெயந்தியன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தெலுங்கிலும் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது.

தமிழில் சர்கார் படத்திற்கான வேலைகளை முடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் அவரது குழுவினரும் தற்போது தெலுங்கு பதிப்பிற்கான பாடல்கள் ரீரெக்கார்டிங் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர். வரும் தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சர்கார் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Sharing is caring!