சர்கார் படத்தின் கதை சர்ச்சை வருண்… விஜய்யின் தந்தையிடம் பணியாற்றிவர்

சென்னை:
சர்கார் படத்தின் கதை என்னுடைய கதை என்று சர்ச்சையை எழுப்பிய வருண் ராஜேந்திரன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திசேகரிடமும் 2 படங்களில் வேலை பார்த்தவராம்.

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய சர்கார் படம் என்னுடைய கதை என்று கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்படுத்தியவர் வருண் ராஜேந்திரன். அவர் பக்கத்தில் நியாயம் இருந்ததால் எழுத்தாளர் சங்கம் அவருக்கு உதவியது.

நீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சுமூகமாக முடிவடைந்துவிட்டது. இப்படி கதை எழுதிவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்கும் இந்த வருண் கோலிவுட்டில் கடந்த 15 வருடமாக உள்ளார்.

பல வருடங்கள் உதவி இயக்குனராகவும், சில படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சில முக்கிய இயக்குனர்களிடம் பணியாற்றியும் உள்ளார். மேலும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இரண்டு படங்களில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!