சர்கார் படத்தின் கதை பிரச்னைக்கு தீர்வு

சென்னை:
விஜய் சர்கார் படத்தின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய்யின் படங்களுக்கு ரிலீஸின் போது ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது. படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து சர்கார் படம் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நடந்தது.

வரும் 6ம் தேதி பட ரிலீஸ். ஆனால் படத்திற்கான கதை திருட்டு பிரச்னை தற்போது பரபரப்பாக ஓடுகிறது. ராஜேந்திரன் என்பவர் தற்போது நீதிமன்றம் வரை பிரச்னையை கொண்டு சென்றுள்ளார். இந்த நேரத்தில் சர்கார் கதைக்கு உரிமை கோரிய ராஜேந்திரனுடன் இயக்குனர் முருகதாஸ் சமரசம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!