சர்கார் படத்தின் சிங்கிள் பாடலான சிமிட்டாங்காரன்… இன்று மாலை வெளியிடப்பட்டது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் பாடலான சிமிட்டாங்காரன்… இன்று மாலை வெளியிடப்பட்டது. மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப் போறான் தமிழன்… பாடலைப் போன்ற ஒரு பாடலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த சிம்ட்டாங்காரன்… ஒரு அதிர்ச்சியைத்தான் கொடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை.

சிம்ட்டாங்காரன் என்றால் என்ன என்பதற்கே இப்பாடலை எழுதிய விவேக் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று அர்த்தம் என்றார். இப்பாடலில் சென்னைத் தமிழ் வார்த்தைகள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட இந்தப் பாடலில் உள்ள பல வார்த்தைகளின் அர்த்தம் புரியுமா என்பது சந்தேகம்தான்.

வித்தியாசமாக எழுதுகிறேன் என பாடலாசிரியர் விவேக் புரியாத பல வார்த்தைகளை வைத்து பெயர் வாங்க முயற்சித்துள்ளார். விவேக் எந்த மொழியில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் எனத் தெரியவில்லை என கமெண்ட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.

Sharing is caring!