சர்கார் படத்திற்கு கேரளாவில் இன்னும் எதிர்பார்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே மெர்சலை விடவும் அதிரடியான அரசியல் கதையில் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், படத்திற்கு சர்கார் என்று டைட்டில் வெளியான பிறகு அந்த தகவல்கள் உறுதி செய்யப் பட்டது.

மேலும், விஜய் நடித்த படங்களுக்கு எப்போதுமே தமிழ்நாட்டைப்போன்று கேரளாவிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். தமிழ்நாட்டு ரசிகர்களைப்போலவே அங்குள்ள ரசிகர்களும் பெரிய அளவில் கட்அவுட், பேனர்கள் கட்டி விஜய் படங்களுக்கு பலத்த வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்த சர்கார் படத்திற்கு கேரளாவில் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்காரணமாக, இந்த படத்தின் கேரளா உரிமையை அதிக விலை கொடுத்து வாங்க பல நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விஜய் படங்களில் இந்த படம் இதுவரையில்லாத அளவுக்கு அதிக தொகைக்கு விலைபோகும் என்கிறார்கள்.

Sharing is caring!