சர்கார் படத்தில் ஆரம்பத்திலேயே அதிரடி காட்சி

சென்னை:
ஆரம்பத்திலேயே அதிரடி காட்சி இருக்காம்… இருக்காம்… சர்கார் படத்தில் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்கார் படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சர்ச்சைகள் இருந்தாலும் வரும் தீபாவளிக்கு படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.

சமீபத்தில் டீசர் வந்தது. இதில் வெளிநாட்டில் கார்ப்பரேட் அதிகாரியாக இருக்கும் விஜய் இந்தியா வந்து தன் சொந்த ஊருக்கு ஓட்டு போட்டு போட வருவார். தேர்தல் ஓட்டு பதிவு நடக்கும் இடத்தில் வரிசையில் நின்று ஓட்டு போடுவார்.

இதுதான் படத்தில் மிக முக்கிய புள்ளியாம். படத்தில் இந்த காட்சி கதை தொடங்கிய 4 வது நிமிடத்தில் வருமாம். இனி என்ன ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!