“சர்கார் படத்தில் இருப்பது பொய் என்றால் ஏற்க முடியாது”

மதுரை:
பொய்யாக இருந்தால் ஏற்க முடியாது… ஏற்க முடியாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்தில் இருப்பது பொய்யாக இருந்தால், அதனை ஏற்க முடியாது என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் அவர் மேலும் கூறியதாவது:

சர்கார் படத்தை இதுவரை பார்க்கவில்லை. படங்கள் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. தேவர் மகன் முதல்பாகத்தில் தவறு இருந்ததாக நினைவு இல்லை. எவரும் தங்களது ஜாதியை உயர்த்தி காட்ட முற்படலாம். ஆனால் மற்ற ஜாதியினரை சிறுமைப்படுத்தி காட்டக்கூடாது.

குழந்தைகள் பட்டாசு வெடித்த காரணத்திற்காக பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!