சர்கார் படத்தில் முதல் காட்சி பார்ப்பேனா… சாந்தனு சோகப்பதிவு

சென்னை:
சர்கார் படத்தின் முதல் காட்சி பார்ப்பேனா என்று தெரியலை என்று சோகமாக பதிவிட்டுள்ளார் நடிகர் சாந்தனு.

நடிகர் சாந்தனு தீவிர விஜய் ரசிகர். அவர் தற்போது சர்கார் கதை சர்ச்சையில் விஜய் ரசிகர்களிடம் சிக்கி சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் சர்கார் படம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். “விஜய் ரசிகர்கள் கோபமாக இல்லாமல் இருந்தால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். கடந்த மூன்று நாட்களாக மோசமான வார்த்தைகளில் எல்லாம் என்னை விமர்சித்துள்ளார்கள்.

“தளபதியின் சகோதரனாய் இருப்பதும் பெருமை இந்தத் ‘தந்தைக்கு’ மகனாய் இருப்பது எனக்கு பெருமை!”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!