சர்கார் படத்துடன் தீபாவளி ரேசில் பங்கேற்கும் தனுஷ் படம்

சென்னை:
சர்கார் படத்துடன் தீபாவளி ரேஸில் பங்கேற்கிறது எனை நோக்கி பாயும் தோட்டா என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கடந்த 2 ஆண்டுகளாக இப்போ… அப்போ என்று நீடித்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

படத்தில் தனுஷின் அண்ணனாக சசிக்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.  ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் யூடியூப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது விட்டது. தனுஷ், சசிக்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி என்று மூன்று புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் கௌதமுக்கு சசிக்குமார் கேக் ஊட்டுகிறார். அந்த கேக்கில் ஹேப்பி தீபாவளி 2018 என எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே விஜய்யின் ‘சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இந்த படமும் தீபாவளிக்கு வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!