சர்கார் படம்… தினம் தினம் விசாரித்த இந்தி தயாரிப்பாளர்

சென்னை:
சர்கார் படத்தின் டிரெண்டிங் பற்றியே தினமும் கேட்டு வந்துள்ளார் பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அப்படியிருந்தும் செம வசூலை தான் பெற்று வருகின்றது, இந்நிலையில் சர்கார் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்தும் பல சாதனைகளை படைத்தது.

இதற்கிடையில் பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஒவ்வொரு நாளும் தன் ஆபிஸில் சர்கார் பற்றி ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பாராம்.
ஏனெனில் எப்போதும் அது தான் ட்ரெண்டிங்கில் இருக்குமாம், எப்படி ஒரு தென்னிந்திய படம் இத்தனை நாட்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது என அதிர்ந்து போனதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!