சர்கார் விற்பனை அமோகம்… கேரளா, இந்தியில் அட்டகாசம்

சென்னை:
இப்போவே ஆரம்பிச்சுடுச்சு சர்காரின் அட்டகாச விற்பனை என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்கார் படம் மெர்சலுக்கு பிறகு விஜய் நடித்து வெளிவர இருக்கும் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் வியாபாரம் தற்சமயம் பெரிய அளவில் நடந்து வருகிறது. கேரள மாநில உரிமை மட்டும் ரூ 9 கோடிக்கு மேலாக வியாபாரமாகும் என கூறப்படுகிறது. ராஜமௌலியின் பாகுபலிக்கு (ரூ. 10.5 கோடி) அடுத்ததாக ஒரு வெளி மாநில படம் பெறும் அதிகப்பட்ச தொகையாகும்.

இந்தியிலும் சர்கார் பெரிய அளவிலயே வியாபாரம் ஆகியுள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!