சர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் 23ம் திகதி ஆரம்பமாக உள்ளதாக சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளன.

பல சர்ச்சைகளை தாண்டி இந்த நிகழ்ச்சியை மூன்றாவது தடவையாகவும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

ஏற்கனவே இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டுமே ஜூன் மாதமே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் 3வது சீசன் ஜூன் 23ம் திகதி ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.

இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் இந்த தகவல் குறித்து விஜய் டிவியில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை.

இதேவேளை, விஜய் டிவியில் இருந்து உத்தியோக பூர்வ அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Sharing is caring!