சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் ஸ்டார் சல்மான்கான்

முசாபர்பூர்:
படத்துக்கு இந்துக்கடவுள் விழாவை இழிவுப்படுத்தும் வகையில் டைட்டிலா என்று கொதித்து வழக்கு போட்டு இருக்காங்க. என்ன விஷயம் தெரியுங்களா?

நடிகர் சல்மான்கான் நடித்து சொந்தமாக தயாரிக்கும் படத்துக்கு, இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக, பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பீஹார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், லவ்ராத்திரி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, அவரே, சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார். இந்த படம், அக்., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் இந்து கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது போல காட்சிகள் இருப்பதாகவும், இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை அவமானப்படுத்துவது போல, படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது.

இந்த படம், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, சுதிர் குமார் என்பவர் பீஹார் மாநிலம், முசாபர்பூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!