சர்ச்சை நடிகை விஜய்க்கு ஜோடியா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.சில முக்கிய கட்சிகளையும் பாடல்களையும்  படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில் விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் விஜய் 63 குறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!